நம்பி நகைச்சுவையான் மகிழ்தல்
வேறு

1567.

பாடு பாணியி லயம்பல தோற்றி
யாடி யாடிய சதித்தொழில் செய்ய|
நாடி நாடி 1ந னிநன்றென நக்கான்
நீடு நீடு 2மு டியானெடி யானே.
     (இ - ள்.) பாடு பாணி இலயம் பல தோற்றி - பாடுதற்குரிய தாளத்திலே பல்வேறு
இலயங்களையும் தோன்றச்செய்து, ஆடிஆடி - பற்பல விதம்பட ஆடி, அசதித் தொழில்
செய்ய, - நகைத்தற்குக் காரணமான தொழிலை இயற்ற, நீடுமுடியால் நெடியான் ஏ - நீண்ட
முடியுடைமையில் பெரியோனாகிய திவிட்டனும், நாடி நாடி - ஆடுந்தோறும் சுவை
தோன்றுமிடங்களை ஆராய்ந்து உணர்ந்து உணர்ந்து, நனி நன்று என - மிக நன்று மிக
நன்று என்று அவ்வப்போது விளம்பி, நீடு நக்கான் - பெருகச் சிரித்து மகிழ்ந்தான்,
(எ - று.)
  
     பாடுகின்ற பொழுது தாளவகையாலே பலவேறு இலயங்களைத் தோன்றச் செய்து
ஆடி ஆடி நகைப்பூட்டுந் தோறும், நம்பியும் அந் நுணுக்கங்களை நாடி நாடி
நன்றுநன்றெனக்கூறி நக்கான் என்க.

(437)