விதூடகன் வயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் புரளுதல் | 1568. | காது கொண்டன கனபொற் குழைசோர மீது கொண்ட வடகம் புடை 3மேவ 4வாதி யாதிமு ழுகும்வயி றென்னாப் பூதி மீதுபு ரளாநரல் கின்றான். | (இ - ள்.) காதுகொண்டன கனபொன் குழைசோர - விகடன் தன் காதுகளிலே அணியப் பெற்ற கனவிய பொன் குண்டலங்கள் நழுவா நிற்பவும், மீதுகொண்ட வடகம் - மேனியிலே கிடந்த மேலாடை, புடைமேவ - ஒரு பக்கத்தே நெகிழ்ந்து போகவும், பூதிமீது புரளா - கீழேவீழ்ந்து புழுதியிலே புரள்வானாய், முழுகும் வயிறு - மோதகங்கள் முழுகப்பெற்ற என் வயிறே, வாதியாதி - என்னை வருத்தாதே கொள், என்னா - என்று கூறி, நரல்கின்றான் - புலம்புவான் ஆயினன், (எ - று.) வாதியாதி - வாதியாதே! வயிறு : விளி. வாதித்தல் - துன்புறுத்தல். அவ்வாறு ஆடுகின்றவன், புழுதியிலே விழுந்து குழைசோரவும், போர்வை நெகிழவும், வயிறே என்னை வருத்தாதே கொள்! என்று புலம்பினான் என்க. | (438) | | |
|
|