1569. | மாத வன்வயி றுபற்றி நரன்றாற் கேத 5மென்னையெ 6ன வேந்தல் வினாவ ஊதி யூதிவ யிறுள்ளள வெல்லாம் மோத கங்கண் முழுகும்பல வென்றான். | (இ - ள்.) மாதவன் - அவ்விகடப் பார்ப்பனன் ஆகிய, வயிறுபற்றி நரன்றாற்கு - தன் வயிற்றைக் கையாற்பற்றிக் கொண்டு அழுவானை, ஏதம் என்னைஎன - நினக்குற்ற துன்பம்யாது என்று, ஏந்தல் வினாவ - திவிட்ட நம்பி வினவ, வயிறு உள் அளவெல்லாம் - வயிற்றினுள்ளிடமெங்கும், மோத கங்கள் - கொழுக்கட்டைகள், ஊதிஊதி - பருத்துப் பருத்து, பலமுழுகும் என்றான்- பற்பல முழுகுகின்றன என்று கூறினான், (எ - று.) நரன்றாற்கு : வேற்றுமை மயக்கம். ஊதுதல் - பருத்தல். நரன்றவனாகிய பார்ப்பனுக்கு உற்ற ஏதம் என்னை என வினாவ எனினும் ஆம். வயிறுபற்றிப் புலம்பிய மாதவனை உனக்குற்ற வருத்தம் என்னை என்று நம்பி வினாவினனாக. என் வயிற்றுள் மோதகங்கள் ஊதி ஊதி முழுகுகின்றன என்றான் என்க. | (439) | | |
|
|