விதூடகன் யான் வேதம் வல்லாரை வெல்வேன் எனல் | 1572. | வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும் வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன் வாதம் வெல்லும் வகையும் 2மெனமாண்பு 3மாது பண்டு மறியும்மற வேலோய். | (இ - ள்.) மற வேலோய் - ஆண்மை மிக்க வேற்படை வேந்தே!, வேதம் வல்லவரை - வேதம் கற்றுவல்லுநரான பார்ப்பனரை, வென்றிடுகிற்கும் - வெல்லுதற்குரிய, வாதம்வல்லன் - வாதித்தற் றொழிலிலே யான் பெரிதும் வன்மையுடையேன், அதனாற் பெறுகிற்பன் - அவ்வாற்றாலே அவரை வென்று யானே கொழுக்கட்டைகள் அனைத்தும் பெறுவேன், மாது - கோப்பெருந்தேவியாரும், வாதம் வெல்லும் வகையும் - யான் வாதத்திலே பிறரை வெல்லுகின்ற விதத்தையும் என மாண்பும் - என்னுடைய வேறு பிற மாட்சிமைகளையும், பண்டும் அறியும்-முன்னரே நன்கு அறிந்துள்ளார், (எ-று.) வேதம் வல்ல வேதியரை வென்றொழிக்கும் வாதப் போரிலே யான் மிகவும் வல்லனாதலின், அவ்வேதியரை வென்று, மோதகம் முழுதும் யானே தின்பேன்; என் வாதப்போர் வன்மையையும், பிற மாண்புகளையும் தேவியார் முன்னரே அறிந்துள்ளார் என்றான்; என்க. | (443) | | |
|
|