1580. கூடி வண்டுகுடை யுங்குளிர் காவில்
ஓடி மண்டிவரு வானொரு பாலாற்
சேடு கொண்டகனி சிந்தின கண்டு
மூடு கொண்ட 3மதி யான்முனி வுற்றான்.
     (இ - ள்.) கூடி வண்டு குடையும் குளிர் காவில் - குழாங் கொண்டு வண்டுகள் மலர்
கிண்டும் குளிர்ந்த பூம்பொழிலின் கண், ஓடி மண்டி வருவான் - ஓடிச் சுழன்று வருகின்ற
விதூடகன், ஒருபாலால் - ஆண்டொரு சார், சேடுகொண்ட கனி - அழகுமிக்க கனிகள்,
சிந்தின கண்டு - சிதறி வீழ்ந்தவற்றைப் பார்த்து, மூடு கொண்ட மதியான் - அறியாமையால்
மூடப்பட்ட மனத்தையுடைய அப்பார்ப்பனன், முனிவுற்றான் - சினங் கொள்வானாயினன்,
(எ - று.)

குளிர்ந்த பொழிலிடத்தே ஓடி மண்டி வரும் வேதியன் ஒரு புறத்தே சிறந்த கனிகன்
உதிர்வன கண்டு அறியாமையாற் சினங்கொண்டான் என்க.
சினத்தற்குக் காரணம் வருகின்ற செய்யுள்களிற் காண்க.
மூடுகொண்ட மதி - அறியாமையுடையமதி.

(450)