திவிட்டன் விதூடகனை அசதியாடல்

1584. யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
காவு மேவுமுசு வின்கலை காட்ட
2வாவவர் கள் 3வரத னாலெழு நாம்போய்த்
தேவி காவுநனி சேர்குவ மென்றான்.
     (இ - ள்.) யாவர் யாவர் - யார்! யார்!, அவர் எங்குளர் என்ன - அத்தகைய கள்வர்
எவ்விடத்தே உள்ளனர் என்று அரசன் விரைந்து வினவ, காவு மேவும் முசுவின்
கலைகாட்ட - விதூடகன் அப்பொழிலிடத்தே உறையும் ஆண் குரங்குகளைக் காட்டினனாக;
ஆ அவர் கள்வர் அதனால் எழுநாம் போய் - அந்தோ அவர் கள்வர்கள்தாம்
ஆகையாலே விரைந்து எழுக யாம் சென்று, தேவி காவு - இக்கள்வர் வாராத
சுயம்பிரபையின் பொழிலை, நனிசேர்குவம் - விரைந்து எய்துவோம், என்றான் - என்று
திவிட்டன் அஞ்சினான்போற் கூறினான், (எ - று.)

அக்கருமுகக் கள்வர் யாண்டுளர் காட்டுக என்று நம்பி கூறலும், விதூடகன், ஆங்கு
மரங்களிலே உறைகின்ற கருமுகக் குரங்குகளைச் சுட்டிக் காட்டி, இவர்தாம் அக்கள்வர்
என்றானாக, நம்பியும், அஞ்சினான் போன்று, ஆ! அவர் கொடிய கள்வரே காண்!
இத்தகைய கள்வர் இப் பொழிலில் மிக்குளர்! ஆதலால் யாம் கள்வர் இலாத தேவியின்
பொழிலிடத்தே செல்வோம் என்றான், என்க.

(454)