நம்பியின் விடை | 1592. | 1இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன் மலைத்தகு வயவுநோ 2ய் தீர வைத்தன கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி அலத்தகச் சுடரென வறியக் காட்டினான். | (இ - ள்.) இலைத்தலை ஈர்ந்தளிர் அல்ல - இலைக்கு முதலாகின்ற ஈரிய தளிர்கள் அல்ல, ஈங்கு இதன் - இவ்வசோகின், மலைத்தகு வயவுநோய் தீர - திகைப்பைச் செய்யத் தகுந்த வயவுப் பிணி தீரும் பொருட்டு, கலைத்தலை மகளிர் - கலைத்தொழிலிலே தலையாய மகளிர்கள், தம் காமர் சீறடி - தம்முடைய அழகிய சிற்றடிகளாலே, வைத்தன - வைக்கப்பட்டன வாகிய, அலத்தகச் சடர் - செம்பஞ்சுக்குழம்பின் ஒளிகளாம், என - என்று, அறியக் காட்டினான் - அவ்விதூடகன் உணருமாறு உரைத்தான், (எ - று.) அதுகேட்ட நம்பி, விதூடக! இவ்வசோக மரத்தின் அடிப் பகுதியிலே தோன்றுவன தளிர்கள் அல்ல; அவை, மகளிர்கள் இதன் வயவு நோய் தீர்த்தற் பொருட்டுத் தம் அடிகளால் மிதித்தபொழுது அவ்வடிகளின் அலத்தகக் குழம்புபட்ட குறிகளேகாண் என்றான் என்க. | (461) | | |
|
|