விதூடகன் சிலாதலத்திற் றோன்றுந் தன்னிழல் கண்டு வெரூஉதல் | 1596. | சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் 1சூழ்ந்தனன் அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே வெருவிய மனத்தினன் விதலை 2மேனியன் பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான். | (இ - ள்.) சொரிகதிர் மணிச்சிலாவட்டம் - பொழிகின்ற சுடர்களையுடைய அம்மணிகள் அழுத்திய பளிங்கு மேடையை, சூழ்ந்தனன் - சுற்றி வந்தவனாய், அருகுநின்று - அதன் அண்மையிலே நின்றுகொண்டு, அந்தணன் - அவ்விதூடகன், அமர்ந்து நோக்கி - பொருந்தப் பார்த்து, வெருவிய மனத்தினன் - அஞ்சிய நெஞ்சினனாய், விதலை மேனியன் - உடல் நடுங்கியவனாய், பெருகிய தலையினன் - விரிந்த மயிரையுடைய தலையையுடையோனாய், பெயர்ந்து - அவ்விடத்தினின்றும் அகன்று, பின்றினான் - பின்னிட்டான், (எ - று.) ஒளிவீசும் அம்மணிச் சிலாவட்டத்தை வேதியன் சுற்றிவந்து, கூர்ந்து நோக்கி அஞ்சி நடுங்கியவனாய்ப் பின்னிட்டு ஓடினான் என்க. | (466) | | |
|
|