இதுவுமது | 1645. | அந்தா ரசோக மசோக மவர்க் கீந்த செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன 2வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே. | (இ - ள்.) அம் தார் அசோகம் - அழகிய பூங்கொத்துக்களை உடைய அசோகமரங்கள், அவர்க்கு - அத்தேவியர்க்கு, அசோகம் ஈந்த - சோகமின்மையை அளித்தன, செந்தார்த்திலகம் - செவ்விய ஒழுங்குபட்ட திலகமரம், திலகமாய்ச் சேர்ந்தன - தம் பூந்தாதுக்களாலே அவர் நெற்றியில் பொட்டாயின, மா - தேமா மரங்கள், ஆ - ஆ ஆ, வந்தார்க்கும் - நம்பால் எய்திய தேவியர்க்கும், ஆதும் - யாமும் உதவுவேம், என்பனபோல் - என்று கருதியன போன்று, தழைந்த - அவர்க்கு நீழலாகித் தழைத்து நின்றன, கொந்து ஆர்பூஞ்சோலைக்கு - கொத்துக்களையுடைய அப்பூம் பொழிலுக்கும் உலகு அறிவோ கூடின்றே - சான்றோர் தம் உணர்ச்சியும் பொருந்துவ தாயிற்று, ஏ : அசை, (எ - று.) | (515) | | |
|
|