1651. | மருவி மழைதவழு மையோங்க சாரல் அருவி கொழித்த வருமணிகள் வாரித் தெருவு படத்திருத்திச் சீலம் புனைவார் உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார். | (இ - ள்.) மழை மருவி தவழும் மை ஓங்கு சாரல் அருவி கொழித்த அருமணிகள் வாரி - முகில்கள் வந்து தவழ்கின்ற இருள்மிக்க தாழ்வரையிடத்தே ஒழுகும் அருவிகள் ஒதுக்கிய பெறற்கரும் மணிகளை அள்ளி, ஒண்நுதலார் - ஒள்ளிய நெற்றியையுடைய அம்மகளிர்கள், தெருவுபடத்திருத்தி - தெருக்களைப்போலச் சீர்திருத்தி, சீலம் புனைவார் - ஒழுங்குபடுத்துவாராய், உருவ நகர் - அழகிய விளையாட்டு வீடுகளை, இழைப்பார் ஆனார் - இயற்றுவாராய் விளையாட்டயர்வாராயினர், (எ - று.) ஒண்ணுதலார் அருவி கொழித்த மணிகளை வாரி வீடியற்றி விளையாட்டயர்ந்தார் என்க. | (521) | | |
|
|