1684. அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
அணங்குநீர்த் திரையவை 1யணைப்ப வொத்தவே.
     (இ - ள்.) அணங்கனார் - தெய்வமகளிரை ஒத்த அத்தேவியரின், அகல் அல்குல்
அலைத்தும் - அகலிதாய அல்குலிடத்தே மோதியும், ஆங்கு அவர் சுணங்கு சூழ்
இளமுலை துளும்பத் தாக்கியும் - அவ்விடத்தே அம்மகளிருடைய தேமல்படர்ந்த
இளமையுடைய முலைகள் அசையும்படி புடைத்தும், வணங்கு பூங்கொடியிடை வளைத்தும் -
நுடங்குகின்ற பூங்கொடிபோன்ற நுண்ணிடையை வளைத்துத் தழீஇயும், வாவிவாய் அணங்கு
நீர்த்திரை - அவ்வாவியில் உள்ள அழகிய நீரின் அலைகள், அணைப்ப ஒத்தவே-
அம்மகளிரொடு கலவி செய்வனவும் போன்றன, (எ- று.)

     நீர்த்திரைகள் அம்மகளிரின் அல்குலினை அலைத்தும், கொங்கை யிடத்தே அசைய
மோதியும், கொடியிடைகளை வளைத்தும் கலவிசெய்யும் கணவரை ஒத்தனவென்க.

(554)