மகளிர்கள் ஒப்பனை செய்தல் | 1688. | தேவியர் திருமணி மேனி நீர்துடைத் தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக் காவியங் கண்ணினார் காக துண்டத்தின் ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார். | இதுமுதல், 6 செய்யுள்கள் ஒரு தொடர். (இ - ள்.) தேவியர் - நம்பியின் மனைவிமார்கள், திருமணி மேனிநீர் துடைத்து - அழகிய மணிநிறமுடைய தம்மேனியின் ஈரத்தைத் துடைத்து, ஆவி அம் துகில் - பாலாவிபோன்று மெல்லிய அழகுடைய ஆடையை, அல்குல்மேல் உடீஇ - தம் இடையிலே உடுத்திக்கொண்டு, காவி அம் கண்ணினார் - குவளை மலர்போன்ற அழகிய கண்ணையுடைய அம்மகளிர்கள், காக துண்டத்தின் ஆவியால் - அகிற்புகையாலே, ஈர்ங்குழல் - ஈரமுடைய தம் அளகக் கற்றையை, ஆவி ஊட்டினார் - மணமூட்டி உலர்த்தினர், (எ - று.) நம்பியோடே பகற்கோயிலின்கட் சென்ற தேவியர் நீர்துடைத்து, ஆவியந் துகிலுடுத்து அகிற்புகையாலே ஈர்ங்குழல் ஆவியூட்டினர், என்க. | (558) | | |
|
|