1689. தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் 1சார்த்திய
2ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே.
     (இ - ள்.) தண் நிறத் தண்கழுநீரின் - தண்மையோடே நன்னிறமமைந்த செங்கழுநீர்
மலரோடே, நெய்தலின் - நெய்தலினது, கள்நிறக் கருங்கடையிதழும் - கள்போன்ற
நிறமுடைய கரிய கடைப்பகுதியுடைய மலரையும், பெய்து - சேரக்கட்டி, இடை - இடை
இடையே, தண் நறும் தமனகக் கொழுந்தும் சார்த்தி - குளிர்ந்த நறுமணமுடைய
மருக்கொழுந்தினையும் வைத்துப் புனைந்த, ஒண்நிறப் பிணையல் - ஒளிமிக்க நிறமுடைய
மாலையே, அன்று உவக்கப்பட்டது - அற்றை நாள் அத்தேவியரால் பெரிதும் விரும்பி
அணியப்பட்டது, (எ - று.)

தமனகக் கொழுந்து - மருக்கொழுந்து.

     செங்கழுநீர் மலரோடே நெய்தல் மலரையும் பெய்து, இடையிடையே
மருக்கொழுந்தும் சார்த்திப் புனைந்த மலர்மாலையே, அற்றை நாள் தேவியராலே பெரிதும்
விரும்பி அணியப்பட்டது என்க.

(559)