1691. | கண்ணகங் குளிர்ப்பக்கல் லாரக் கற்றையும் தண்ணறு 3ங் குவளைதா மெறித்த தாமமும் ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார். | (இ - ள்.) இளையர் - இளமைப்பருவம் உடைய தேவிமார், கண் அகம் குளிர்ப்ப - நம்பியின் கட்பொறி இன்புறுமாறு, கல்லாரக்கற்றையும் - நீர்க்குளிரியாலாய பூங்கற்றைகளையும், தண்நறும் குவளைதாம் எறித்த தாமமும் - குளிர்ந்த நறுமணங்கமழும் செங்கழுநீர் மலராலாய ஒளிமிக்க மாலைகளையும், ஒண்ணிறத் தாமரை ஒலியலும் - ஒள்ளிய நிறமமைந்த தாமரை மலராலியன்ற தொடையல்களையும், தழீஇ - அணிந்துகொண்டு, எண்ணரும் பெருங்கவின் எய்தினார் - நினைத்தற்கும் அரிய பேரழகுடையர் ஆயினார், (எ - று.) கல்லாரம் - நீர்க்குளிரி என்னும் ஒரு நீர்ப்பூ, (பிங்கல, 303) அஃது இக்காலத்தே துளிரி என்ற வழங்கப்படுகின்றது.இளமைமிக்க தேவியர் கல்லாரக் கற்றையும் குவளைத்தாமமும் தாமரை ஓலியலும் தழீஇக் கருதற்கியலாக் கவினுடன் திகழ்ந்தனர் என்க. | (561) | | |
|
|