1724. | மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம் அணிநக ரணுகின தடிக ளென்றலும் பணிவரைக் 1காணர்மினீர் பாங்கி னென்றனன் துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான். | (இ - ள்.) மணிநகு விமானம் ஒன்று - மணிகளாலே விளங்குகின்ற ஒரு விமானம், இழிந்து வந்து நம் அணி நகர் அணுகினது அடிகள் என்றலும் - வானத்தினின்றும் இறங்கி நமது நகரத்தை வந்து எய்தியது பெருமானே என்று காவலர்கள் உரைத்தவுடனே, துணிநகு சுடர்ஒளி துளும்பும் வேலினான் - தெளிவுடனே விளங்குகின்ற சுடரும் ஒளியாலே திகழா நின்ற வேற்படையையுடைய திவிட்டநம்பியும், பணிவரை - ஏவலரை நோக்கி, நீர் பாங்கின் கொணர்மின் என்றனன் - நீயிர் சென்று அவ்விமானத்தில் வந்தோரை எம்பாற் கொணர்க என்று கட்டளையிட்டருளினான், (எ - று.) பணிவர் - பணியாளர். பணியாளர் நம்பியின் பாலெய்தி ஒரு விமானம் நம் நகரில் வந்துளதென்ன அவ்விமானத்தே வந்தாரை எம்பாற் கொணர்க என்று அப்பணியாளர்க்கு நம்பி பணித்தான் என்க. | (594) | | |
|
|