அம் மகவின் மாண்பு | 1733. | தேமரு செங்கழு நீரின் செவ்விதழ் காமரு பவழவாய் கமழுங் கண்மலர் தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர் பூமரு தமனியக் குழவி போலுமே. | (இ - ள்.) தேம் மரு செங்கழுநீரின் - தேன் பொருந்திய செங்கழுநீர் மலர்போன்ற, செவ்விதழ் - செவ்விய உதடுகளையும், காமரு பவழவாய் - விரும்புதற்குரிய பவழம் போன்ற திருவாயினையும், தாமரை அக இதழ் புரையும் கமழும் கண்மலர் - தாமரையினது அகவி தழை நிகர்த்த மணமுடைய கண்களாகிய மலரையும் உடைய, தானும் - அக்குழவிதானும், ஓர் பூமரு தமனியக்குழவி போலுமே - ஒப்பற்ற அழகிய பொன் மகவுபோன்று திகழ்ந்தது, (எ - று.) அம்மகவு செங்கழுநீர் மலர்போன்ற செவ்விதழும் பவழவாயும் தாமரைபுரையும் கண்ணும் உடையதாய்த் தமனியக் குழவி போலும் என்க. | (603) | | |
|
|