அம்மகவிற்கு “அமி்ததேசன்Ó என்று பெயர் சூட்டல் | 1735. | அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான் அளப்பருந் திறலின னமித தேசனென் றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார். | (இ - ள்.) அளப்பரும் திறலுடை அரசர் - கணித்தற் கரிய பேராற்றலுடைய தன் மூதாதையராகிய அரசருடைய, தொல்குடை - பழையதாகிய திங்கள் வெண்குடையின் நீழல், அளப்பரும் திறலினோடு - பகைவரால் அளந்தறிய வொண்ணாத பேராற்றலோடே, அலர - விரியும்படி, தோன்றினான் - பிறந்தானாகலின், அளப்பரும் திறலினன் - அளத்தற்கரிய பேராற்றலுடைய இந் நம்பி, அமிததேசன் என்று - அமிததேசன் என்று, அளப்பரும் திறல் பெயர் - அளத்தற்கரிய ஆற்றல் என்னும் பொருளையுடைய பெயரை, அமரக் கூறினார் - பொருந்தும்படி வழங்கினார், (எ - று.) அமிதம் - அளவுபடாமை. தேசு - அழகு ஒளி புகழ் அறிவு முதலியவற்றைக் குறிக்கும் பலபொருள் ஒருசொல். ஈண்டு, தேசு - என்பது, தமிழிலே திறல் என்று இப்புலவரால் மொழிபெயர்க்கப்படுகின்றது. எனவே அமிததேசன் - என்பதற்கு அளவிலாத்திறலோன் என்பது பொருளாகலின் ‘அளப்பருந்திறற் பெயர்’ என்றார், தேசு: வடசொல். அளப்பருந் திறலினோடு தோன்றலின் அமிததேசன் என்று பெயரிட்டனர் என்க. | (605) | | |
|
|