1746. ஐயன் றானு மவ்வகை யாலே வளர் 2வெய்த
மையுண் கண்ணி மாபெருந் தேவி மகிழ் 3தூங்கத்
தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
மெய்யின் சோதி சூழொளி மின்னின் 4பெயராளும்.
       (இ - ள்.) ஐயன் தானும் - விசயனும், அவ்வகையாலே - யாம் முன்னர்க்கூறிய
வகையால், வளர்வெய்த - வளரா நிற்ப, மாபெருந்தேவி - கோப்பெருந்தேவியாகிய
சுயம்பிரபை, மகிழ்தூங்க - உலகம் மகிழும்படி, தெய்வம் பேணி பெற்றனர் - தெய்வத்தை
வழிபட்டு அதனருளாலே எய்தியவர்கள், பேணும் - ஓம்புகின்ற, திருவே போல் -
செல்வத்தைப் போன்று பெற்று ஓம்பாநின்ற, மையுண்கண்ணி - மை தீட்டப்பெற்ற
கண்களையுடைய, மெய் இன் சோதி சூழ் - திருமேனி இயற்கையிலேயே இனிய ஒளியாலே
சூழப்பெற்ற, ஒளி மின்னின் பெயராளும் - சோதிமாலை an்னும் பெயரையுடைய அப்பெண்
மகளும், (எ - று.)

     பெயராளும் வளர்கின்றாள் என அடுத்த செய்யுளில் முடியும். பெயர் சோதிமாலை என்க.

     விசயன் அவ்வாறு வளர்வுழி பெருந்தேவி மகிழ்தூங்க திருவே போல் சோதிமாலையும்
(வளர்கின்றாள்) என்க.

(616)