சோதிமாலை வளர்தற் சிறப்பு

1747. தேதா வென்றே தேனொடு 1வண்டு திசைபாடும்
போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள்.
     (இ - ள்.) தேனொடு வண்டு - தேனும் வண்டும், திசை - திக்குகளிலே, தே தா
என்றே பாடும் - தேதா என்னும் வாய் பாடுபட இன்னிசை பாடாநின்ற, போது ஆர் - மலர்
பொருந்திய சாயல் பூங்கொடிபோல - அழகிய பூங்கொடியைப் போல, பொலிவு எய்தி -
அழகுபெற்று, தாது ஆர் கோதைத் தாயரொடு ஆயம் புடைசூழ - பூந்துகள் பொருந்திய
மாலையணிந்த செவிலியரோடே விளையாட்டு மகளிர்களும் தன்னைச் சூழாநிற்ப, மாது ஆர்
சாயல் மாமயில் அன்னாள் வளர்கின்றாள் - அழகு பொருந்திய தோற்றமுடைய சிறந்த
மயிலை ஒத்த சோதிமாலையும், வளர்வாளாயினாள், (எ - று.)

     திசை - இசையுமாம், “எனக்கு வந்து தீயோர் திசைத்ததுமில்லைÓ (கம்பராமாயணம்,
கைகேசி சூழ்வினை.)

     தே தா என்றது இசையின் வாய்பாடு. தே தா என்று வண்டுகள் பாடும் பூங்
கொம்புபோன்று அழகெய்தித் தாயரும் ஆயமும் புடைசூழ மயிலன்னாள் வளர்கின்றாள்
என்க. மாது - அழகு, ஆயம் - விளையாட்டு மகளிர் குழு.

(617)