1750. | நங்கை நல்லார் பாராட்ட நகையாட் டாயம் புகலோடு மங்கை மடவார் பந்தாடன் மயங்கி யாடன் மணிநிலத்துக் கொங்கை சேர்ந்த குங்குமத்தின் குழம்புங் கோதை கொய்தாதும் 1அங்க ராகத் துகளும்பாய்ந் தந்தி வான மடைந்ததுவே. | (இ - ள்.) நங்கை - சோதிமாலை, நல்லார் பாராட்ட - மகளிர்கள் பாராட்டும்படி, நகை ஆட்டு ஆயம் - மகிழ்தற்குரிய ஆடல் மகளிர் கூட்டத்தில், புகலோடும் - எய்தியவுடனே, மங்கை மடவார் - ஆயமகளிராய அம்மடப்பமிக்கோர், பந்தாடல் மயங்கி, பந்து விளையாட்டிலே பொருந்தி, ஆடல்மணி நிலத்து - ஆடாநின்ற அவ்வழகிய நிலத்திலே, கொங்கைசேர்ந்த குங்குமத்தின் குழம்பும் - அம்மகளிர் கொங்கைகளிலே பூசப்பெற்ற குங்குமச்சேறும், கொய்கோதை தாதும் - கொய்து கட்டிய மலர்ப் பூந்துகளும், அங்கராகத்துகளும் - நறுமணச் சுண்ணங்களும், பாய்ந்து - உதிர்ந்து, அந்திவானம் அடைந்ததுவே - அந்தி வானத்தின் தன்மையை அடைந்தது, (எ - று.) நல்லார் பாராட்டச் சோதிமாலை ஆயம் புக்கவுடன் மடவார் ஆடலிற் பொருந்த அம் மணிநிலம் குழம்பும் அங்கராகத் துகளும் பாய்ந்து அந்திவானம் போன்றது என்க. | (620) | | |
|
|