1763. | வாலிய 2சந்தமென் சேறு மட்டித்துப் பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன 3பாலியல் பலிபெறு முரசம் 4பண்மையில் ஆலியங் கதிர்கொள வதிர்ந் தறைந்தவே. | (இ - ள்.) வாலிய சந்த மென் சேறு மட்டித்து - தூய்மையுடைய, சந்தனத்தின் மென்மைமிக்க குழம்பை நீவி, பீலி அம் தழையொடு - மயிற்பீலியும் அழகிய தழையும், பிணையல் வேய்ந்தன - மலர்மாலையும் சூட்டப்பட்டனவாகிய, பாலியல் பலிபெறு முரசம் - ஆன்பாலானியன்ற பலியைக் கொள்ளும் முரசங்கள், பண்மையில் - இனிமையோடே, ஆலி அதிர் கொள - ஆரவாரித்து அதிரும்படி, அதிர்ந்து அறைந்த - அதிர்ந்து முழுங்கின, (எ - று.) சோதிமாலையின் சுயம்வரச் செய்தியைப் பலிபெறு முரசம் அதிர்ந்து முழங்கி அறிவித்த தென்க. | (633) | | |
|
|