1766. | இற்றை நாள்தொட்டுப் பத்துநாட்கள் சுயம்வர விழா நாட்கள் எனல் இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும் மன்றலஞ் 1சுயவரம் வரைந்த தாதலால் ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே. | (இ - ள்.) இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்ஐஞ் ஞாள்களும் - இந்த நாள் தொடங்கி மேனிகழும் பத்து நாட்களும், மன்றலம் சுயம்வரம் வரைந்தது ஆதலால் - திருமணத்திற்குக் காதரணமான சுயம்வரத்திற்கு என்று குறிக்கப்பட்டுள்ளமையால், ஒன்றி வாழ் அரசரொடு உலகம் ஈண்டுக - கேண்மை கொண்டு வாழ்கின்ற மன்னர்களுடனே இவ்வுலகில் வாழ்வோரெல்லாம் வருக, என்று தான் இடி முரசு அறைந்தது என்பவே - என்றிவ்வாறு கூறி இடிக்கும் முரசு முழக்கப்பட்டது என்று மேலோர் கூறுவர், (எ - று.) ஞாள்கள் - நாள்கள் : நகரத்திற்கு ஞகரம் போலி. இன்று தொடங்கிப் பத்து நாட்கள் சுயம்வரத்திற்கென வரையறை செய்யப்பட்டமையால் அரசர்களுடனே மக்கள் எல்லாம் அவ்விழாவிற்கு வருக என்று முரசறைந்தனர் என்க. | (636) | | |
|
|