இதுவுமது | 1773. | இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம் தெருவுடைத் 2திசைமுகந் 3தெளிப்பத் தேர்த்தரோ மருவுடை மகரநீர் வளாகம் வானவர் 4உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே. | (இ - ள்.) இருபுடைக் கிளைகளும் இன்னணம் விரவி - இருதிறத்துச் சுற்றமும் இவ்வாறு தம்முட் குழீஇ, தெருவுடைத் திசைமுகம் தெளிப்பத் தேர்த்து - தெருக்களையுடைய திசைகளின் பகுதிகள் விளங்கும்படி தேங்குதலானே, மருவுடை மகரம நீர் வளாகம் - மகரமீன்கள் மருவி வாழ்தலுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்மிசை, வானவர் - தேவர்களுடைய, உருவுடை உலகம் வந்து - எழிலுடைய விண்ணுலகம் விரும்பி வந்து, இழிந்தது ஒத்ததே - இறங்கியதை ஒத்துத் தோன்றியது (எ - று.) தேர்த்து - தேங்கி; இதனைச் செயவெனெச்சமாக்குக. திவிட்டநம்பி அருக்ககீர்த்தியாகிய இரு பேரரசருடைய சுற்றமும் ஒன்று கூடித் தேங்காநிற்ப வானவருலகம் இம்மண்ணுலகை விரும்பி வந்திறங்கியதை ஒத்துத் தோன்றிற்று அக்காட்சி என்க. | (643) | | |
|
|