1777. | அங்கதற் கைந்துகோ லளவி னாடரங் கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான் மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே. | (இ - ள்.) அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் - அவ்விடத்தே அவ் வேதிகையினின்றும் ஐந்து கோல் தொலைவிடத்து, ஆடரங்கு இங்கு வந்து இறுத்தனவென்னும் ஈட்டன - அரம்பையர் ஆடும் அரங்கு, இவ்விடத்தே இறங்கி வந்து தங்கின வென்று கூறும்படி பெருமை யுடையனவாய், செங்கதிர் பவழக்கால் நிரைத்த - செவ்விய ஒளியுடைய பவழத் தூண்கள் நிரலாக நிறுத்தப்பட்டனவும், மங்கலச் செய்கைய - அழகிய தொழிற்றிறன் அமைந்தனவும், மஞ்சு சூழ்ந்தவே - முகில்கள் தவழ்வனவும், (எ - று.) அவ் வேதிகையினின்றும் ஐந்துகோல் தொலைவின்கண் அரம்பையர் ஆடரங்கு போன்றனவும் பவழக்கால் நிரைத்தனவும் மங்கலச் செய்கை செய்தனவும் மஞ்சுசூழ்ந்தனவுமாய் என்க. (1781) சயமர மாளிகைகள் இயற்றி என முடித்திடுக. | (647) | | |
|
|