(இ - ள்.) மண்டங்கும் மகரவாசனத்தும் - மண்ணிடத்தே தங்குதலையுடைய மகரமீன் வடிவினவாய்ச் செய்த ஆசனங்களும், மென்மயில் கண்டங்கள் புரைவன - மென்மையுடைய மயிலின் கழுத்துக்களை ஒப்ப, கனபொற் கொட்டைய - கனவிய பொன்னாலியன்ற கொட்டைகளை யுடையனவும், அண்டங்கொள் அன்ன மென்தூவி ஆர்த்தன - முட்டைகளைக் கொண்ட அன்னப் பறவைகளின் மெல்லிய தூவிகள் செறிக்கப்பட்டனவும், எண்தங்கு மணியன - உள்ளம் சென்று பதிவதற்குரிய மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆக, இயற்றப்பட்ட - அமைக்கப்பட்டன,(எ - று.)அரிதின் றேந்திய அணைகளே அன்றி மகரவாசனங்களும் மயிற் கழுத்தை ஒப்பனவும் கொட்டைகளை யுடையனவும் தூவி ஆர்த்தனவும் மணியனவுமாய் இயற்றப்பட்டனவாய் என்க. |