1782. | சயமர மாளிகை யியற்றிச் சந்தனப் பயமர நிழலொளி மஞ்சம் பாவின வியமரத் தொழிலவர் வினைமு 1டிந்ததென் றியமரத் தொழுதிக ளெழுந்தி சைத்தவே. | (இ - ள்.) சயமர மாளிகை இயற்றி - சுயம்வர மண்டபங்கள் எடுத்து, சந்தனப் பயம் மரம் நிழல்ஒளி மஞ்சம் பாவின - பயன்மிக்க சந்தன மரத்தாலாகிய ஒளிநிழற்றும் கட்டில்கள் பரப்பப்பட்டனவாய், வியம் மரத்தொழிலவர் வினை - மிக்க மரத்தொழில் வல்லுநர்தொழில், முடிந்தது என்று - நிறைவேறிற்று என்றவுடனே, இயமரம் தொழுதிகள் எழுந்து இசைத்தவே - இசைக் கருவிகளின் குழாங்கள் ஆரவாரித்தன, (எ - று.) சயவர மண்டபங்கள் சந்தனமர நிழலொளி மஞ்சம் பாவினவாய்த் தொழிலவர் வினை முடிந்த என்றவுடன் இயமரம் எழுந்து இசைத்த என்க. (2777) முகில்கள் தவழ்வனவுமாய், (1778) உயரவிட்டனவாய் (1779) இயற்றப்பட்டனவாய், (1780) மிடையப்பட்டனவாய், (1781) விருந்து செய்தவாய், (1782) சயமர மாளிகைகள் மஞ்சம் பாவின வினைமுடிந்த என்றவுடனே இயமரம் எழுந்திசைத்த என்று இயைத்துக் கொள்க. | (652) | | |
|
|