குருகுலக் கோமகன் மாண்பு

1805. இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
     1கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
2மன்னவன்றன் மடமகளே 3மற்றிவனுக்
     கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
4பொன்னவிரு மணியணைமேற் 5பொழிகதிரீண்
     டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
     6கோனிவனே கூறக் கேளாய்.
     (இ - ள்.) இன்னவனது உயர்குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும்
சொல்லவேண்டா - இப்பரதன் மரபினனாகிய மன்னனுடைய உயர்ந்த குலப்பெருமையையும்,
இவன் இளமை நலத்தினையும் அழகின் சிறப்பையும் இவ்விடத்தே இனி யான் கூறிக்காட்ட
வேண்டா, மன்னவன்றன் மடமகளே - அரசன் மகளாகிய சோதிமாலாய், மற்றிவனுக்கு
இடமருங்கின் மஞ்சம் சேர்ந்து - இம்மன்னனுக்கு இடப்பாகத்தே இடப்பட்ட இருக்கையின்
மேலமைந்த,

     பொன் அவிரும் மணியணைமேல் - அழகு விரியும் மணிகளிழைத்த பஞ்சணையின்
மேலே, பொழிகதிர் ஈண்டு எழுந்ததுபோல் பொலிந்து தோன்றும் - பொழிகின்ற சுடருடைய
கதிரவனே இவ்விட,த்தே எழுந்தருளினாற் போன்று விளங்கித் தோன்றாநின்ற, கொல்
நவின்ற வேல்குமரன் - கொலைத்தொழிலமைந்த வேலையுடைய இளமன்னன், கூறக்கேளாய்
- யார் என யான் இயம்புவேன் கேள், இவனே குரு குலத்தார் கோன் - இவன்
குருமரபிற்றோன்றிய மன்னன் ஆவான், (எ - று.)

இவன் பெருமை உலகறிந்ததாகலின் கூறவேண்டா என்றாள், என்க.
மன்னவன்றன் மடமகளே! இன்னவனை இனி யான் கூறவேண்டா, இவன் இடமருங்கே
மஞ்சஞ் சேர்ந்து பொலிந்து தோன்றும் வேற் குமரன், குருகுலத்தார்கோன் கூறக் கேளாய்
என்றாள் என்க.

(675)