இதுவுமது | 1809. | தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான் றுறவரசாய் நின்ற காலை மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு வடமலைமே லுலக மாண்ட சிகரமா லியானையான் வழிமருகன் செந்தாமந் தவழ்ந்து தீந்தேன் பகருமா மணிமுடியா 2னமரருமே பாராட்டும் படியன் பாவாய். | (இ - ள்.) தகரம் நாறு இருஞ்சோலை - தகரமலர் கமழும் பெரிய பொழிலின் கண்ணே, சயம்பூல்தான் - சயம்பூலி என்பவர், துறவரசாய் நின்றகாலை - தவத்தாற் சிறந்து துறவிகட்கு அரசாகத் திகழ்ந்த காலத்தே, மகரயாழ் நரம்பியக்கி - தனது இசை நூல் வன்மையால் மகரயாழினது நரம்பை வருடி இனிய இசைபாடி, வரங்கொண்டு - அம்முனிவனிடத்தே சிறந்த வரங்களைப் பெற்று, வடமலைமேல் உலகம் ஆண்ட - இமயமலை மேலிருந்து உலகத்தை ஆட்சி செய்த, சிகரமால் யானையான் - சிகரங்களை ஒத்த பெரிய யானைப்படையையுடைய மன்னனுடைய, வழிமருகன் - மரபின் வழிவந்தவன், தீம் செந்தாமம் தவழ்ந்து தேன் பகரும் மாமணி முடியான் - இனிய செவ்விய மலர் மாலைகளிலே ஊர்ந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த மணிகள் பதித்த முடியுடைய இம்மன்னன், அமரருமே பாராட்டும் படியன் - தேவர்களும் புகழ்தற்குரிய உருவத்தையுடையவன் ஆவான், பாவாய் - சோதிமாலாய்!, (எ - று.) சயம்பூலி துறவரசாய் நின்ற காலை நரம்பியக்கி வரங்கொண்டு வடமலைமேலுலகம் ஆண்ட யானையானாகிய உக்கிரவேந்தனின் மரபினன் அமரருமே பாராட்டும் அழகன் இவன் என்றான் என்க. | (679) | | |
|
|