சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் திருமணம்
நிகழ்த்தல்

1828. நெய்த்தலைப் பாலுங் காங்கு
     நெடுவரை யுலகின் வந்த
மைத்துன குமரன் றன்னை
     மடமொழி மாலை 1சூட்ட
இத்தலை 2யரசர் கோமா
     னெரிகதி ராழி வேந்தன்
கைத்தலை வேலி னாற்குக்
     கடிவினை முடிவித் தானே.
     (இ - ள்.) நெய்த்தலைப் பால் உக்கு ஆங்கு - நெய்யின்கண் பால் பொழியப்பட்டாற்
போன்று, நெடுவரை உலகின் வந்த - நீண்ட மலையுலகாகிய இரத நூபுரத்தினின்றும் வந்த,
மைத்துன குமரன்றன்னை - தன் மைத்துனனாகிய அமித தேசனை, மடமொழி -
சோதிமாலை, மாலை சூட்ட - இவ்வண்ணம் மணமாலை சூட்டா நிற்ப, இத்தலை -
இவ்விடத்தே, அரசர் கோமான் - மன்னர் மன்னனாகிய, எரிகதிர் ஆழி வேந்தன்-
விளங்கிய சுடர் உடைய சக்கரப் படையையுடைய திவிட்ட மன்னன், கைத்தலை
வேலினாற்கு - கையிடத்தே வேற்படையையுடைய அமித தேசனுக்கு, கடிவினை
முடிவித்தான் ஏ - திருமண வினையை எஞ்சாது நிகழ்த்தி முடித்தான், (எ - று.)
 

சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் உள்ள உறவினை உணர்த்து வார்
“நெய்த்தலைப்பாலுக்காங்குÓ என்றார்.

     மைத்துன குமரன்றன்னை மடமொழி மாலைசூட்ட, இத்தலை ஆழி வேந்தன்
அவ்வேலினாற்குக் கடிவினை முடிவித்தான் என்க.

(698)