சுதாரை விசயனை மாலை சூட்டல் | 1835. | மாதராள் சுதாரை வாட்கண் மலரொடு மணிவண் டார்க்கும் போதுலாம் பிணையல் வீரன் பொன்வரை யகலஞ் சூழ ஏதிலா மன்னர் வாட 2விருபுடைக் கிளைஞ ரெல்லாம் காதலாற் களித்துச் செல்வக் கடிவினை முடிவித் தாரே. | (இ - ள்.) மாதராள் சுதாரை - எழில் மிக்கவளாகிய சுதாரை என்பாளுடைய, வாட்கண் மலரொடும் - வாள் போன்ற கண்ணாகிய மலருடனே, மணி வண்டார்க்கும் - மணி நிறம் படைத்த வண்டுகள் ஆரவாரிக்கும். போது உலாம், பிணையல் - மலர் பொருந் ிய (சுதாரையாற் சூட்டப்பட்ட) மாலையும், வீரன் - விசயனுடைய, பொன்வரை அகலம் சூழ - பொன் மலையை ஒத்த மார்பிலே பொருந்தா நிற்ப, ஏதிலா மன்னர் வாட - பிறராகிய அரசர் எல்லாம் மனம் புழுங்க, இருபுடைக் கிளைஞர் எல்லாம் - இருபக்கத்தும் உளராகிய கேளிர்கள் எல்லோரும், காதலால் களித்து - அன்பாலே மகிழ்ச்சிமிக்கு, செல்வக் கடிவினை முடிவித்தார் - செல்வ மிக்க திருமண வினையை நிகழ்த்தி முற்றுவித்தார், (எ - று.) இருபுடைக் கிளைஞர் -மணமகன் மணமகளாகிய இருவருடைய உறவினர். சுதாரையின் கண் மலரோடே பிணையலும் விசயன் அகலஞ் சூழ ஏதிலா மன்னர் வாட இருபுடைக் கிளைஞர் எல்லாம் களித்து மணம் முடித்தனர் என்க. | (705) | | |
|
|