நல்லூழின் சிறப்பைப் பாராட்டல் | 1843. | அலகுடன் விளங்கு மம்பொற் குடைநிழ லரசர் சூழ உலகுடன் வணங்க வோடை யுயர்களிற் றெருத்த 2மேலால் பலகுடை பணியச் செல்லும் பண்பிது நமக்குத் தந்த நலனுடைத் தளிய நங்க ணல்வினைத் தெய்வ மன்றே. | (இ - ள்.) அலகுடன் விளங்கும் அம்பொன் குடை நிழல் - ஒளிக்கதிருடனே திகழ்கின்ற அழகிய பொற்குடை நீழலிலே, ஓடை யுயர் களிற்று எருத்தம் மேலால் - முகபடா மணிந்த அரச யானையின் பிடரின்கண் வீற்றிருந்து, அரசர் சூழ - வேந்தர்கள் பலர் சூழ்ந்துவர, உலகு உடன் வணங்க - உலகமெல்லாம் ஒருங்கே வணங்க, பல குடை பணியச் செல்லும் - பல குடைவேந்தரும் வணங்குமாறு ஊர்வலம் செல்ல நின்ற, பண்பிது - பண்புடைய இப்பேற்றை, நமக்குத் தந்த - நமக்குக் கொடுத்தருளிய, நலனுடைத்து - நன்மையைத் தன் கண்ணே உடையதாயிற்று, அளிய - அளிக்கும் தன்மையுடைய நங்கள் - நம்முடைய, நல்வினைத் தெய்வம் அன்றே - நல்வினையாகிய ஊழ் அன்றே: அசை, (எ - று.) தெய்வம் எனினும், ஊழ் எனினும் ஒக்கும். குடை நிழலிலே, அரசர் சூழ, உலகு வணங்க, களிற்றெருத்தின் மேல், பணியச் செல்லும். இப் பண்பு நமக்குத் தந்தது நாம் ஆற்றிய நல்வினைப் பகுதியாகிய ஊழே என்றான் என்க. அனையதாகலின், அந்நல்வினை ஈண்டு முயலப்படும் என்பது கருத்தாகக் கொள்க. | (713) | | |
|
|