இதுவுமது

1850. ஒழுகிய முடையு நீரு
|
     2முதலகை யிகப்ப வூறும்
அழுகலிவ் வள்ளல் யாக்கை
     யகம்புற மாயிற் றாயில்
கழுகொடு கவருங் காக்கை
     3கைத்தடி கொண்டு காத்தும்
அழகுள சுழலு மன்னோ
     வாயிரச் சாதி மாதோ.
     (இ - ள்.) ஒழுகிய முடையும் நீரும் - ஒழுகும் முறைமையுடைய மலமும் மூத்திரமும்;
முதல - முதலவாகிய இழிபொருள்கள், கையிகப்ப -மிகுதியாக, ஊறும் - ஊறுதற்கு இடமான,
அழுகல் - அழுகற் பண்டமாம், இ அள்ளல் யாக்கை - இந்த ஊன் சேற்றாலாய உடல்,
அகம் புறம் ஆயிற்றாயில் - உட்புறம் வெளிப்புறமாமாறு ஆய்விட்டால், கைத்தடி கொண்டு
காத்தும் - கைத்தடியை வைத்துக்கொண்டு பாதுகாத்தவிடத்தும், கவரும் கழுகொடு காக்கை
அழகுள ஆயிரச் சாதி சுழலும் மன்னோ - ஊன் கவர்ந்துண்ணும் கழுகு காக்கை முதலிய
அழகுடைய உயிரினங்கள் ஆயிரவகைகள் புறம் போகாமற் சுற்றா நிற்கும், (எ - று.)

“ஊறி யுவர்த்தக்க வொன்பது வாய்ப்புலனும், கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைÓ
என்றார் பிறரும். அழகுள கழுகொடு காக்கை ஆயிரச்சாதி எனக் கூட்டுக. முடை - மலம் -
முடைநாற்ற முடையதனை முடை என்றார். முடை ஊனுமாம்.

(720)