அறிவிலாதார் செயல் | 1851. | வல்வினை விளைத்த 1மாந்தர் மற்றதன் வித்து மாட்டிப் புல்வினை கான மண்டிப் புலியின்வாய்ப் பட்ட தேபோல் நல்வினை யினிதி 2னூட்டு நல்வினை முதல்கண் மாறி இல்வினை யின்பம் வெஃகி யிறுபவே யறிவி லாதார். | (இ - ள்.) நல்வினை இனிதின் ஊட்டும் - நல்வினைகள் தம் பயனை ஊட்டுமிடத்து இனிதின் இன்புறுமாறு ஊட்டா நிற்கும், நல்வினை முதல்கண் மாறி - அந்நல் வினையின் காரணங்களினின்றும் விலகி, இல்வினை யின்பம் வெஃகி - இல்லிடத்தே யிருந்து முயன்று பெறும் இன்பத்தையே பெரிதும் விரும்பி, வல்வினை விளைத்த அறிவிலாதார் மாந்தர் - தீவினைகளையே பெரிதும் செய்துகொண்ட பேதை மனிதர்கள், மற்றதன் வித்தும் மாட்டி - அத்தீவினைகளின் விதைகளையும் மேலைக்கு விளைவாக மூட்டி வைத்து, புல்வினைக் கானம் மண்டி - தம்மைச் சூழத் தீவினைக்காடுகளே மண்டப் பெற்று, புலியின் வாய்ப்பட்டதேபோல் - அக்காட்டினூடே புலியின் வாயகத்தே பட்டது போன்று துன்பமுற்று, இறுபவே - மாண்டொழிவர், (எ-று.) இன்பமே காமுறுவோராயிருந்தும், அவ்வின்பம் நல்வினையே ஊட்டும் என்பதனை அறியாதார், இன்பமே வெஃகி அல்வினை செய்து அல்லல் உ.ற்று மாண்டொழிவர் என அறியாமையை நினைந்து இரங்கியவாறு. “துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை, இன்பமே காமுறுவ ரேழையார்Ó என்றார் பிறரும், | (721) | | |
|
|