(இ - ள்.) அம்தழை பீலி பிணித்திட்ட வட்டமும் - அழகாகத் தழைத்த மயிற்பீலிகள் பிணிக்கப்பட்ட மயில் விசிறிகளும், ஆலி அங்கு அசைப்பன ஆலவட்டமும் - ஆடுமாறு அவ்விடத்தே அசைக்கப்படு வனவாகிய ஆலவட்டமும், மேவி விசும்பிடத்தே பொருந்தி, அங்கு ஒளியவன் மறைய வேய்ந்து - அவ்விடத்தே கதிரவன் மறைந்துபோம்படி மூடி, காலியங்கிட இடம் காண்கிலார் - கால்காலியங்கவும் இடங்காணவியலாதவராயினர், (எ - று.)மயிற்பீலி வட்டமும் ஆலவட்டமும் கதிரவனை மறைத்து நெருங்கின; அவ்விடத்தே கால் இயங்கவும் இடமில்லை என்க. |