1886. | நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச் சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக் கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே. | (இ - ள்.) பூப்பலி நிரந்தன - கடவுட்கிடும் பூப்பலிகள் யாண்டும் பரவின, சுரும்பு இவர் துணர்கொள் பூமழை - வண்டுகள் மொய்க்கின்ற கொத்துக்களைக் கொண்ட மலர்மாரி, நரைகொள் மாரியாய்ச் சொரிந்தன - ஒழுங்குபட்ட மழை போன்று மிக்குப் பொழியப்பட்டன, மங்கலப் பதாகை - மங்கலத்திற்கு அறிகுறியான கொடிகள், பரந்தன - பரவின, அவ்வழி - அவ்விடத்தே, கருவினைக் குழாங்கள் கரந்தன என்பவே - பிறப்பிற்குக் காரணமான வினைக் கூட்டங்கள் மட்டும் மறைந்தன என்று அறிவுடையோர் கூறுவர், (எ - று.) கரு - பிறப்பு. கருவினை - தீவினை எனினுமாம். கடவுட்கிடும் பூப்பலி மழைபோல மிக்குப் பொழிந்தன. பரந்தன மங்கலப் பதாகை, கருவினைக் குழாம் ஒளிந்தன என்க. | (786) | | |
|
|