பயாபதி மன்னன் திருக்கோயிலுக்குச் செல்லல் | 1889. | நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர் பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன் சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன் ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான். | (இ - ள்.) நீர்ப்பலி விரைப்பலி நிரந்துதேன்இமிர் பூப்பலி - நீராகிய பலியும், மணப் பொருளாகிய பலியும், செறிந்து வண்டுகள் பாடுகின்ற மலராகிய பலியும், என இவை நிரைத்து - என்று கூறப்படுகின்ற இம்மூவகைப் பலியும் நிரலே கொண்டு, புண்ணியன் - அறவோனாகிய அருகக்கடவுளின், சீர்ப்பொலி சினகரம் சென்று சேர்ந்தனன் - சிறப்பாற் பொலிவுற்றுத் திகழ்கின்ற திருக்கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தான், ஆர்ப்பு ஒலி தழுவிய அரவத்தானையான் - ஆரவாரிக்கும் ஒலியாலாய முழக்கத்தையுடைய படைகட்கு மன்னனாகிய பயாபாதி, (எ - று.) அரவத்தானையான் நீர்ப்பலி முதலிய மூவகைப் பலியும் கொண்டு புண்ணியன் சினகரம் சென்று சேர்ந்தனன் என்க. | (779) | | |
|
|