அருகக்டவுள் அமர்ந்த அணையின் சிறப்பு

1892. குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய
மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே.
 
     (இ - ள்.) குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய - யானையின் பெரிய கையையும்
குழவியாகிய களபத்தினது தலையையும் உடையதாயும், மஞ்சிவர் தோற்றத்து - முகில்கள்
தவழும் உயர்ந்த தோற்றத்துடன், மகரவாயொடு - மகரமீனின் வாய்களுடன், செஞ்சுடர்
மணிநிரை அழுத்தி - செவ்விய சுடருடைய மணிகளை வரிசையாகப் பதித்து,
செம்பொனால் அம்சுடர் உமிழ்வது - செம்பொன்னாலியற்றப் பட்டமையால் அழகிய
ஒளிகால்வதாம், அவ்வணையின் வண்ணமே - அவ்வடிகள் அமர்ந்த திரு அணையின்
தன்மை,  (எ - று.)

     தடக்கையை யுடையதும் சென்னியை உடையதும் ஆகி மரகவாயோடு மணி
நிரையழுத்திச் சுடருமிழ்வது அவ் வணையின் வண்ணம் என்க.

(782)