1899. மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
பைஞ்ஞலம் பருகிய 2பரும வல்குலார்
மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
3கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.
     (இ - ள்.) மைஞ் ஞலம் பருகிய கருங்கண் - மையினது நன்மையை உண்ட கரிய
கண்ணையுடையவரும், மாமணிப் பருமம் - சிறந்த பதினென்கோவை மணிவடம் பூண்ட,
பைஞ்ஞலம் பருகிய - பாம்புப் படத்தின் எழிலையுடைய, அல்குலார் - அல்குற்றடத்தை
யுடையவருமாகிய மகளிரோடே, மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ - உடலழகுமிக்க
விச்சாதரர்கள் வந்து பரவா நிற்ப, மேல் எலாம் - விசும்பிடமெங்கும், கிஞ்ஞர மிதுனங்கள்
- கின்னரம் என்னும் ஆண் பெண் ஆகிய இணைப்பறவைகள், தோன்றும் - தோன்றா
நின்றன, (எ - று)

ஞலம் - நலம்: நகரப் போலி. மிதுனம் - இணைப்பறவை.

     விஞ்சையர்தம் மாதரோடே விரவ மேலெலாம் கின்னர மிதுனம் தோன்றும் என்க.

(789)