1904. கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
     1கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா 2யென்றும்
அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
     3அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
திருமாலே 4தேனாரு மரவிந்த மேந்துத்
     திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
     பிணங்குவார் 5தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே.
      (இ - ள்.) கருமாலை வெவ்வினைகள் கால்தளர நூறி - உயிர்களைப் பிறப்பிலே
புகுத்தும் தன்மையவாகிய வெவ்விய இருவகைவினைகளையும் தளர்ந்தும்போம்படி
பொடிசெய்தொழித்து, கடையிலா ஒள்ஞானக் கதிர்
விரித்தாய் என்றும் - இறுதியில்லாத ஒள்ளிய அறிவாகிய சுடரைப் பரப்பினாய் என்று
கூறியும், அருமாலை நன்னெறியை முன் பயந்தாய் என்றும் - மேற்கோடலரிய ஒழுங்குபட்ட
நல்லொழுக்கத்திற்குரிய வழியை முன்னரே காட்டியருளினாய் என்று கூறியும், அடியேம் -
உன் திருவடிகட்கு அடிமையாகிய யாங்கள், அடிபரவும் ஆறு அறிவதல்லால் - உன்
திருவடிகளைத் தொழுதேத்தும் ஒரு வழி் மாத்திரையே அறிந்திருப்ப தல்லாமல்,

     திருமாலே - திருமால் என்னும் திருப்பெயருடையோனே, திருவணங்கும் - திருமகள்
வணங்கா நின்ற, தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் சேவடியாய் - தேன் பொருந்திய
செந்தாமரை மலராலே தாங்கப்பெற்ற சிவந்த அடியிணையுடையோனே,

     தேவாதிதேவ - தேவர்களுக்கும் தலைவனே, பெருமானே - எத்திறத்தார்க்கும்
பெரியானே, நின் பெருமை நன்கு உணரமாட்டாதார் - உன் சிறப்புக்களை நன்றாக
அறிந்துகொள்ள இயலாதவராய், பிணங்குவார் தம்மை - நீ வகுத்த நெறியோடு முரணி
ஒழுகுவாரை, பிணக்கு ஒழிக்கலாமே - அம்முரணை ஒழித்தல் எம்மானோர்க்கு
இயல்வதேயோ,

(794)