1909. தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
     திரளரைய செம்பவளம் வம்பாக வூன்றி
வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
    மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
1யானருள வேண்டியடி 2யிணைபணியும் போழ்து
    3இமையவர்கோ னாயிரச்செங் கண்ணினான் வந்து
தானருளு மாறென்று 4தாள்பணியும் போழ்துந்
    5தகையொன்ற தேலிறைமை தக்கதே யன்றே.
     (இ - ள்.) தேன் அருளி - தேன் துளித்து, மந்தாரச் செந்தாமம் தாழ்ந்து -
ஐந்தருபினொன்றாகிய மந்தாரத்தின் மலராற் புனைந்த செவ்விய மாலை தூங்க, திரள்
அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி - திரண்ட அரையினையுடைய பவளத்தாலியன்ற
காலைப் புதுமைபெற ஊன்றி, வான் மாணிக்கச் செங்கதிர்கள் வீசி அருளி - விசும்பின்கண்
மாணிக்க மணியின் செவ்விய ஒளிகளைப் பரப்பி அருளி, மதி மருட்டும் - திங்களை
மருளச் செய்யும், வெண் குடை -வெண்மை நிறமமைந்த குடைகள், ஓர் மூன்றுடைய வாமன்
- ஒரு மூன்றனை உடையவனாகிய அருகக் கடவுள்,

     யான் அருள வேண்டி அடியிணை பணியும் போழ்தும் - மனிதனாகிய யான் அவன்
அருளுதலைக்குறித்துத் திருவடிகளை வணங்குமிடத்தும், இமையவர் கோன் - தேவேந்திரன்
என்னும், ஆயிரச் செங்கண்ணினான் வந்து -ஆயிரங் கண்களையுடைய தேவன் இவண்
வந்து, தான் அருளும் ஆறு என்று - தான் அருளப்படும் வழி இது வென்று கருதி, தாள்
பணியும் போழ்தும் - தன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குமிடத்தும், தகை ஒன்றதேல் -
இவ் விரண்டிடத்தும் உளதாம் தன்மை ஒன்றே ஆகும் என்னில், இறையை தக்கதே அன்றே
- அக்கடவுளின் தலைமைத் தன்மை தகுதியுடையதே ஆயிற்று, (எ - று)

(799)