நால்வகைப் பிறப்பும் நவிலல் | 1921. | ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள வீடி லொருவன் 1விசிறும் வளையமும் ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர் நாடுங் கதியவை நான்குள கண்டாய். | (இ - ள்.) ஓடும் சகடத்து உருளும் - ஓடாநின்ற பண்டியின் உருளைகளையும், ஒளிகொள - ஒளியுண்டாகும்படி, வீடில் ஒருவன் - தொழிலை விடாதியற்றுகின்ற ஒருவனாலே, விசிறும் வளையமும் - சுழற்றி எறியப்படுகின்ற வளையத்தையும், ஆடும் துகளும் - காற்றாலே இயங்குகின்ற அணுவையும், என - போன்று, ஆருயிர் சுழன்று - சிறந்த உயிர்கள் சுழற்சியடைந்து, நாடும் கதியவை - விரும்பிச் செல்கின்ற கதிகள், நான்கு உள கண்டாய் - நான்கு உள்ளன, அறிக, (எ - று) சகடத்துருளும், வளையமும், துகளும் போலச் சுழன்று உயிர்கள் நாடும் பிறப்பு நான்கு வகைத்தாம், என்றான் என்க. | (811) | | |
|
|