(இ - ள்.) கீழாம் நரகங்கள் - கீழே உள்ளனவாகிய நரக லோகங்கள், கிளத்தும் படலங்கள் - கூறப்படுகின்ற பகுதிகள், ஏழாய் - ஏழாகி விரிந்து, இருபத்து இரட்டியோடு ஒன்பது - நாற்பத்தொன்பது. போழாம் - உட்பிரிவு களையும் உடையனவாம், அவற்றுள் - அவ்விடங்களில், அவர்கள் புகலிடம் - அந் நரகர்கள் புகும் புரைகள், பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே - எண்பத்து நான்கு நூறாயிரம் என்னும் முடிவையுடையவாம், (எ - று.)பாழாம் இலக்கம் எண்பத்துநான்கு - இலக்கத்தோடு முடிகிற எண்பத்துநான்கு என்றபடி. பாழ்ஆம் - முடிவு ஆம். எனவே, எண்பத்துநான்கு நூறாயிரம் என்றவாறாயிற்று. போழ் - பிரிவு. படலம் - பகுதி. “ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம் போழாம் அவற்றப் புரையின் விகற்பம்Ó என்றார் நீலகேசியினும். |