நரகங்களின் பெயர் | 1924. | இருளி னிருளு மிருளும் புகையும் அருளி லளறு மணலும் பரலும் மருளின் மணியு மெனவிப் பெயர பொருளி 1னரகங்கள் போதரக் கொண்ணீ. | (இ - ள்.) இருளின் இருளும் - பேரிருளும், இருளும் - இருளும், புகையும் - புகையும் அருள் இல் அளறும் - அருட்பண்பிலாத சேறும், மணலும் - மணலும், பரலும் - பரற்கற்களும், மருளின் மணியும் - வியப்புடைய மணியும், என இப்பெயர - என்று கூறப்படுகின்ற இவ்வேழு பெயர்களை உடையன, பொருள்இல் நரகங்கள் - சிறந்த பொருள் இல்லாத இந்த நரகங்கள், போதரக்கொள் நீ - இவற்றை உள்ளத்தே புகுத நீ உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) இருளின் இருள் - தமத்தமப்பிரபை, இருள் - தமப்பிரபை, புகை - தூமப்பிரபை, அளறு - பங்கப்பிரபை, மணல் - வாலுகாப் பிரபை, பரல் - சர்சராப் பிரபை, மணி - ரத்னப் பிரபை, என்பனவாம். இவை நரகங்களின் பெயர் என்க. | (814) | | |
|
|