1927. | பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும் தாழிப் பதலையும் போலுந் தகையன ஆழப் பரந்த வழுக லளறவை பீழைப் பதகர் பிறக்கு மிடமே. | (இ - ள்.) பேழைப் பிளவும் - பெட்டிகளைப்போன்று திறந்து மூடும் வாய்களையும், பிலத்தின் முகங்களும் - குகை போன்ற இருண்ட வாயையும், தாழிப் பதலையும் - தாழியாகிய பதலை என்னும் பாண்டத்தின் வாயையும், போலும் தகையன - போன்ற தகுதியுடைய வாய்களையுமுடைய, ஆழப் பரந்த - ஆழ்ந்தகன்ற, அழுகல் அளறு அவை - அழுகற்பொருள் நிறைந்த அந்நரகங்கள், பீழைப்பதகர் - பிறவுயிர்க்கு இன்னாசெய்யும் பாவிகள், பிறக்கும் இடமே - பிறந்து வருந்துதற்குரிய இடங்களாகும், (எ - று.) பேழைப் பிளவு - பேழையைப் போன்ற பெரிய வாய். பிளவும் முகங்களும் போலும் தகையன அழுகலளறு. பீழைப் பதகர் பிறக்கும் இடம் என்றார், என்க. | (817) | | |
|
|