1932. | தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை அங்கு மகிழ்ந்தா னவளிவள் காணெனச் செங்கன லேயென வெம்பிய 1செம்பினில் பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார். | (இ - ள்.) இருள் தங்கு போதில் - இருள் வதிகின்ற இராக்காலத்தே, அயன்மனைத் தலைச்சென்று - அயலான் இல்லத்தே சென்று, அங்கு மகிழ்ந்தாளவள் - அவ்விடத்தேயுள்ள பிறனோடு கூடிக் களித்தவளாகிய, இவள்காண் என - இவளைக் காணுங்கோள் என்று கூறி, செங்கனலே என செவ்விய தீப்பிழம்பைப் போன்று, வெம்பிய - உருகிய, செம்பினில் பொங்கு அனற்பாவைகள் - செம்பாலியன்ற பொங்கும் நெருப்புப் படிவங்களை, புல்லப் புணர்ப்பார் - தழுவும்படி செய்வார், (எ - று.) இரவில், பிறன்மனை புக்குப் பிறனோடு களித்தவளாகிய இவள் படும்பாட்டைப் பாருங்கோள் என்று கூறி, அத்தகைய மகளிரை நெருப்புப் பாவைகளோடு புணர்த்துவரென்க. | (822) | | |
|
|