1933. | கொள்ளு மிவையெக் கூட்டில் வளர்த்ததம் வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள் அள்ளிக் கதுவ வலறி 2யயலது முள்ளிற் புனைமர மேற முயல்வார். | (இ - ள்.) தம் கூட்டில் வளர்த்த - தம்முடைய கூடுகளிலே அடைத்து வளர்க்கப்பட்ட, வள்ளுகிர் பேழ்வாய் ஞமலி - வளைந்த நகங்களையும் பெரிய வாயையுமுடைய நாய்களை, கொள்ளும் இவையென -- இவையிற்றை இரையாகத் தின்னுங்கோள் என ஏவ, வடிவுகள் அள்ளிக் கதுவ - அந்நாய்கள் பசியோடே ஆங்குள்ளாரின் உடல்களை வாயாலே அள்ளிக்கொண்டு கவ்வாநிற்ப, அலறி - ஆற்றாது அழுது, அயலது - பக்கத்தே உளதாகிய, முள்ளிற் புனைமரம் - முட்களோடே செய்தமைத்த மரங்களின் மேலே, ஏற முயல்வார் - அந்நாய்களுக்குத் தப்புமாறு ஏறுவதற்கு விரைவார், (எ - று.) எமபடர், தம் கூட்டிலடைத்த நாய்களைத் திறந்துவிட்டு இவர்களைத் தின்னுமின் என்று ஏவுதலாலே, அந்நாய் அவர்கள் தசையினைக் கவ்வ, ஆற்றாராய் அயலுள்ள முண்மரத்தே ஏறிஉய்வேம் என்று ஓடாநிற்பர் என்க. | (823) | | |
|
|