1936. | 2இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான் முடைப்பொலி மேனியை முண்மத் திகையால் புடைப்ப நடுங்கிப் புரளவ ரொருசார். | (இ - ள்.) எளியவர் தம்மை - ஏழைகளை, இடைப் பல சொல்லி - இடைப்போதில் இனியன போன்ற வஞ்சகமொழிகள் பலவற்றைக் கூறி, உடைப்பொருள் வெஃகி - அவர்கட்கு உரிய பொருள்களை விரும்பி, ஒறுத்த பயத்தான் - அவற்றைக் கவர்ந்து அவர்களைத் துன்புறுத்திய தீவினையின் பயனாக, முடைப்பொலி மேனியை - ஊனாலே விளக்கமுடைய அவர்களுடைய உடலை, முள் மத்திகையால் புடைப்ப - முள் அமைந்த சம்மட்டியாலே தாக்க, நடுங்கிப் புரள்வர் ஒருசார் - துன்புற்று நடுங்கியவர்களாய்த் தரையில் வீழ்ந்து புரளா நிற்பர் ஒரு பக்கத்தே, () எளியவரைப் பொருளை விரும்பி இன்னல் செய்தவர்களை முட் சம்மட்டியாலே புடைப்ப, அவர் நடுங்கிப் புரள்வர் என்க. | (826) | | |
|
|