1937. | வெறுப்பன வேசெய்து மேலா யவரைக் குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால் பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே. | (இ - ள்.) வெறுப்பனவே செய்து - பிறர் வெறுத்தற்குரிய தீச்செயல்களையே யாண்டும் செய்து, மேல் ஆயவரை - மேன்மக்களாகிய சான்றோரை, குறிப்பு அல சொல்லிய - தகுதிக்கு ஒவ்வாத வசை மொழிகளைக் கூறி வைத நாவை - தீயவர்களின் நாக்குகளை, கொடிற்றால் - குறட்டாலே, பறிப்பர் - பிடுங்கி, உகிர்வழி - நகக்கண் வழியே, பரிய வயிரமுள்கொண்டு - பருத்த வயிரத்தாலியன்ற முட்களை எடுத்து, ஏறச்செறிப்பர் - நெடிது உள்ளே ஏறுமாறு செருகா நிற்பர், சிலர் - சிலவர், (எ - று.) பிறர் வெறுத்தற்குரிய தீச் செயலையே செய்பவராய்ச் சான்றோரைக் கொடிய சொல்லிய கயவர்களின் நாவினைக் குறட்டாலே பறிப்பர். அவருடைய நகத்திடைய வயிர ஊசியைப் பாய்ச்சுவர் என்க. | (827) | | |
|
|