1938.

பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக்
கரிப்பர் கனல்படு காரக 1லேற்றித்
திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய்
துரிப்ப ருடலை யவரு மொருபால்.
 
      (இ - ள்.) சிறைசெய்து - இந்நரகரைச் சிறைக்கோட்டங்களிலே இட்டு, பொங்கு
எரிமாட்டி - கிளருகின்ற தீயைக் கொளுவி, கரிப்பர் - கருக்குவர், கனல்படு கார் அகல்
ஏற்றி - தீயிற் காய்ந்த கரிய இருப்பு அகல்களிலே யிட்டு, பொரிப்பர் - பொரித்திடுவர்,
பலரையும் - பற்பல நரகர்களையும், செக்கு உரலில் பெய்து - செக்காகிய உரல்களினுள்ளே
தள்ளி, திரிப்பர் - உலக்கைகளால் ஆட்டா நிற்பர், உடலை உரிப்பர் - உடலின்கட்டோலை
உரியா நிற்பர், அவரும் ஒருபால் - அத்தகையோரும் ஒரு பக்கத்தே உளர், (எ - று.)

ஒருபக்கத்தே நெருப்பிலிட்டுச் சிலரைப் பொரிப்பர்; கரிப்பர்; செக்குரலுட்பெய்து
திரிப்பர்; உடலை உரிப்பர் என்க.

(828)