1942. | அழலிவை யாற்றோ மெனவழன் றோடி நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால் 3தழல்வளி தாமே தலைவழி சிந்தக் கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார். | (இ - ள்.) அழலிவை ஆற்றோம் - இந்நெருப்பிடை நிற்றலை இனிப் பொறோம், என - என்று கூறி, அழன்று - மனம் புழுங்கி, நிழல் இவையாம் என நீள்பொழில் ஒடிப்புக்கால் - இவை நமக்கு நிழலாகும் என்று கருதி ஆங்குள்ள நீண்ட சோலைகளினூடே ஓடிப் புகுந்தவிடத்தே, தழல்வளி தாமே - அச்சோலையில் நெருப்புக்காற்று, தலைவழி சிந்த - மேலிருந்து தம் தலையின் வழிச்சொரிய, கழல்வனர் - உய்வோம் என்னும் நம்பிக்கை கழன்றவராய், வீழ்ந்து கரிவர் ஒருசார் - தரையிடை விழுந்து உடல் கருகுவர் ஒரு பக்கத்தே, (எ - று.) அவ்விடத்தேயுள்ள தீக்குப் பயந்து ஓடி நிழலிலே புக்கால் தீக்காற்றுத் தம் தலையிலே சொரிய வீழ்ந்து கரிவர் என்க. | (832) | | |
|
|